தெலுங்கானா சிக்கலும் - தொடரும் சர்ச்சைகளும்
>> Sunday, January 9, 2011
இந்தியாவும் பாகிஸ்தானும் இனி இருவேறு நாடுகள் என்றாகிவிட்ட நிலையில், ஏற்கனவே அறிவித்தது போல ஹைதராபாத் இந்தியாவோடு இருக்க விரும்பவில்லை என்றும் ,இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மன்றத்திலும் முறையிட இருக்கின்றோம் என்று நிஜாம் ஆகஸ்ட் 17ஆம் தேதி , 1947 அன்று நேருவிற்கு கடிதம் எழுதினார் . ஆனால் இந்தியா - ஹைதராபாத் பிரச்சனை என்பது உள்நாட்டு சிக்கல் என்று சொல்லி ஒரு வழியாக ஹைதராபாத் இந்தியாவோடு இணைக்கபட்டு விட்டது .
இரண்டாக இருந்த ஹைதராபாத் மாநிலமும் , ஆந்திரா மாநிலமும் 1956 ஆம் ஆண்டு இணைக்கப்பட்டு ஆந்திரா பிரதேசம் என உருவாக்க பட்டது . இன்றைக்கு ஒட்டு மொத்த இந்தியாவின் கவனமும் ஆந்திரா பிரதேசம் மீது இருக்கிறது . தெலுங்கான தனி மாநிலமாக வேண்டும் என்றும், தனியாக பிரிக்க கூடாது என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவ , இது தேசிய கட்சிகளுக்கு குறிப்பாக பல ஊழல் குற்றசாட்டு , பீகார் தேர்தல் என கலகத்தில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது .
தெலுங்கானா சிக்கல் அந்த மாநிலத்தின் இராண்டவது முதல் அமைச்சரான தாமோதரம் சஞ்சீவ் அய்யா பதவி காலத்தில் இருந்தே பேசப்பட்டு வருகின்றது , இவர் மாலா என்னும் தாழ்த்த பட்ட சமுகத்தை சார்ந்தவர் , சென்னை சட்டக்கல்லூரியில் சட்ட படிப்பை முடித்த இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் 1960 -1962 வரை முதல் அமைச்சராக பணியாற்றினார் , அதன் பிறகு 1970 களில் நடந்த தேர்தல்களில் தெலுங்கானா பகுதியை சார்ந்த நரசிம்மராவ் (1971 -1973 ) முதல் அமைச்சர் பதவியில் அமர்ந்தார் ,அப்பதவிக்கு தெலுங்கானா பகுதியில் இருந்து முதல் முறையாக தேர்ந்தெடுக்க பட்டவர் அவர் தான் . அவரை தொடர்ந்து ஜலகம் வெண்கல ராவ் (1973 -1978 ) , மரி சென்னா ரெட்டி (1978 -1980 ),அஞ்சய்யா (1980 -1982 ) என தொடர்ந்து தெலுங்கானா பகுதியை சார்ந்தவர்களே முதல அமைச்சர் பதவியில் அமர முடிந்தது . பிறகு ஏற்பட்ட பல்வேறு அரசியல் மாற்றங்களால் மரி சென்னா ரெட்டி(1989 -1990 ) ஓராண்டு மட்டுமே மீண்டும் அந்த பதவியில் அமர முடிந்தது . அதன் பிறகு இருபது ஆண்டுகளில் நடந்த ஆறு சட்ட மன்ற தேர்தலிலும் தெலுங்கானா பகுதியை சார்ந்த எவராலும் முதல் அமைச்சர் பதவில் அமர முடியாத நிலை ஏற்பட இன்றைக்கு தெலுங்கான சிக்கல் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது .
தனி தெலுங்கானா கோரி சந்திர சேகர ராவ் தொடங்கிய உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தருவதாக உஸ்மானியா பல்கலைகழக மாணவர்கள் அறிவிப்பு செய்து போராட்டத்தில் இறங்க அவர்களுக்கு ஒய்வு கொடுத்து இயற்கையும் அதன் பங்கிற்கு புயல் மற்றும் வெள்ளம் என பாதிப்புகளை ஏற்படுத்தி சென்று விட்டது . ஆனால் இன்னும் தெலுங்கான சிக்கல் மட்டும் ஓய்ந்த பாடில்லை .
கடந்த பத்து ஆண்டுகளில் தெலுங்கானா பகுதியில் எந்த விதமான உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை ஆனால் ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தபட்டு உள்ளது . மகபூப் நகர் மாவட்டத்தில் இருந்து மட்டும் சுமார் 33 % பேர் வரட்சியின் காரணமாக புலம் பெயர்ந்து வெளி மாநிலங்களில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் .ஆந்திரா மற்றும் ராயல்சீமா பகுதியில் பாலின் விலையை 24 ரூபாய் கொடுத்து வாங்கும் அரசு தெலுங்கானா பகுதியில் 22 ருபாய் மட்டுமே வழங்கபடும் என வேறுபடுத்தி பார்க்கிறது . கிருஷ்ணா , கடப்பா , குண்டூர் ஆகிய இந்த மூன்று மாவட்டத்தில் மட்டும் 25 அரசு கல்லூரிகள் இருக்கிறது ஆனால் தெலுங்கானாவிற்க்கு உட்பட்ட ரங்கா ரெட்டி மாவட்டத்தில் மட்டும் ஒரு அரசு கல்லூரி கூட இல்லை . 2005 -2008 ஆண்டுகளில் ஆந்திரா அரசு 20000 கோடி ரூபாய்க்கு நிலங்களை பன்னாட்டு நிறுவங்களுக்கு விற்பனை செய்து இருக்கிறது ஆனால் அதன் மூலம் ராயலசீமா மற்றும் ஆந்திரா பகுதிகளில் மட்டுமே வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது திட்டமிட்டே தெலுங்கானா பகுதி புறக்கணிக்க படுகிறது . தெலுங்கானா பகுதியின் வளர்ச்சிக்காக அரசு 28% மட்டுமே நிதி ஒதுக்குகிறது அதையும் சிறப்பான முறையில் செய்வது இல்லை .
எல்லாவற்றிக்கும் மேலாக என் . டி. ராமராவ் முதல்வராக இருந்த போது அரசு பணிகளில் தெலுங்கானா பகுதியில் இருப்பவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பிறப்பித்த அரசானை ( Go: No: 610 ) கிடப்பில் போட பட்டு உள்ளது . இப்படி பல்வேறு செய்திகளை தெலுங்கானா பகுதி முழுவதும் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஸ்ட்ரிய சமிதி கட்சி தெலுங்கானா ஏன் வேண்டும் ? என பரப்புரை மேற் கொண்டதின் விளைவு தெலுங்கானா பகுதியில் கடந்த ஆண்டு நடந்த இடை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றார்கள் ,மாணவர்களின் ஆதரவும் பெருகிவரும் நிலையில் இந்த சிக்கலுக்கு எப்படியாவது ஒரு தீர்வு காண ஸ்ரீகிருஷ்ணா குழு நியமிக்கப்பட்டது . அதன் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு அனைத்து கட்சியில் இருந்து இரண்டு பிரநிதிகளை ப.சிதம்பரம் அழைக்க மறுப்பு தெரிவித்து விட்டார் சந்திர சேகர ராவ் .
எல்லாவற்றிக்கும் மேலாக என் . டி. ராமராவ் முதல்வராக இருந்த போது அரசு பணிகளில் தெலுங்கானா பகுதியில் இருப்பவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பிறப்பித்த அரசானை ( Go: No: 610 ) கிடப்பில் போட பட்டு உள்ளது . இப்படி பல்வேறு செய்திகளை தெலுங்கானா பகுதி முழுவதும் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஸ்ட்ரிய சமிதி கட்சி தெலுங்கானா ஏன் வேண்டும் ? என பரப்புரை மேற் கொண்டதின் விளைவு தெலுங்கானா பகுதியில் கடந்த ஆண்டு நடந்த இடை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றார்கள் ,மாணவர்களின் ஆதரவும் பெருகிவரும் நிலையில் இந்த சிக்கலுக்கு எப்படியாவது ஒரு தீர்வு காண ஸ்ரீகிருஷ்ணா குழு நியமிக்கப்பட்டது . அதன் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு அனைத்து கட்சியில் இருந்து இரண்டு பிரநிதிகளை ப.சிதம்பரம் அழைக்க மறுப்பு தெரிவித்து விட்டார் சந்திர சேகர ராவ் .
ஒரு வழியாக ஜனவரி 5 ,ஆம் தேதி ஸ்ரீ கிருஷ்ணா அறிக்கை வெளியானது ஆந்திரா மாநிலத்தை பிரிக்க வேண்டுமானால் அதை எப்படி பிரிக்கலாம் , ஹைதராபாத் யூனியன் பிரதேசமாக மட்டுமே இருக்க வேண்டும் .என்று கருத்துகள் சொல்ல அந்த அறிக்கையை எல்லாம் உஸ்மானியா பல்கலை கழக மாணவர்கள் தீயிட்டு கொளுத்தி வருகிறார்கள் . வன்முறை காட்சிகளை தொலைகாட்சியில் காண்பிக்க தடை போட பட்டு உள்ள நிலையில் , தனி தெலுங்கானா வேண்டி மீண்டும் உண்ணாவிரதம் இருக்க போவதாக ராவ் அறிவிப்பு ,புது கட்சி தொடங்கும் எண்ணத்தில் யாத்திரை போகும் ஜகன் மோகன் ரெட்டி , தெலுங்கான கூடாது என முரண்பட்டு நிற்கும் சந்திர பாபு நாயுடு , யாரோடு கூட்டு சேருவது என முழிக்கும் சிரஞ்சீவி.இப்படி ஆந்திராவில் அரசியல் காட்சிகள் தினமும் மாறி வரும் நிலையில் .
தெலுங்கானாவை பிரிப்பதா வேண்டாமா என்பதை விட காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் பிளவுபடாமல் இருக்க வேண்டும் என முயற்சியில் ஈடுபட்டு வருகிறது காங்கிரஸ் மேலிடம் .
-- தமிழரின் குரல்
தெலுங்கானாவை பிரிப்பதா வேண்டாமா என்பதை விட காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் பிளவுபடாமல் இருக்க வேண்டும் என முயற்சியில் ஈடுபட்டு வருகிறது காங்கிரஸ் மேலிடம் .
-- தமிழரின் குரல்


0 comments:
Post a Comment