தெலுங்கானா சிக்கலும் - தொடரும் சர்ச்சைகளும்

>> Sunday, January 9, 2011



இந்தியாவும் பாகிஸ்தானும் இனி இருவேறு நாடுகள் என்றாகிவிட்ட நிலையில்,  ஏற்கனவே அறிவித்தது போல ஹைதராபாத் இந்தியாவோடு இருக்க விரும்பவில்லை என்றும் ,இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மன்றத்திலும் முறையிட இருக்கின்றோம் என்று நிஜாம் ஆகஸ்ட் 17ஆம் தேதி , 1947  அன்று நேருவிற்கு கடிதம் எழுதினார் . ஆனால் இந்தியா -   ஹைதராபாத் பிரச்சனை என்பது உள்நாட்டு சிக்கல் என்று சொல்லி ஒரு வழியாக ஹைதராபாத் இந்தியாவோடு இணைக்கபட்டு விட்டது . 

இரண்டாக இருந்த ஹைதராபாத் மாநிலமும் , ஆந்திரா மாநிலமும் 1956 ஆம் ஆண்டு இணைக்கப்பட்டு ஆந்திரா பிரதேசம் என உருவாக்க பட்டது . இன்றைக்கு ஒட்டு மொத்த இந்தியாவின் கவனமும் ஆந்திரா பிரதேசம் மீது இருக்கிறது . தெலுங்கான தனி மாநிலமாக வேண்டும் என்றும், தனியாக பிரிக்க கூடாது என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவ , இது தேசிய கட்சிகளுக்கு குறிப்பாக பல ஊழல் குற்றசாட்டு , பீகார் தேர்தல் என கலகத்தில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது . 

 தெலுங்கானா சிக்கல் அந்த மாநிலத்தின் இராண்டவது முதல் அமைச்சரான தாமோதரம் சஞ்சீவ் அய்யா பதவி காலத்தில் இருந்தே பேசப்பட்டு வருகின்றது , இவர் மாலா என்னும் தாழ்த்த பட்ட சமுகத்தை சார்ந்தவர் , சென்னை சட்டக்கல்லூரியில் சட்ட படிப்பை முடித்த இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்  1960 -1962 வரை முதல் அமைச்சராக பணியாற்றினார் , அதன் பிறகு 1970 களில் நடந்த தேர்தல்களில் தெலுங்கானா பகுதியை சார்ந்த நரசிம்மராவ் (1971 -1973 ) முதல் அமைச்சர் பதவியில் அமர்ந்தார் ,அப்பதவிக்கு  தெலுங்கானா பகுதியில் இருந்து முதல் முறையாக தேர்ந்தெடுக்க பட்டவர் அவர் தான் . அவரை தொடர்ந்து ஜலகம் வெண்கல ராவ் (1973 -1978 ) , மரி சென்னா ரெட்டி (1978 -1980 ),அஞ்சய்யா (1980 -1982 ) என தொடர்ந்து தெலுங்கானா பகுதியை சார்ந்தவர்களே முதல அமைச்சர் பதவியில் அமர முடிந்தது .  பிறகு  ஏற்பட்ட பல்வேறு அரசியல் மாற்றங்களால்  மரி சென்னா ரெட்டி(1989 -1990 )  ஓராண்டு மட்டுமே மீண்டும் அந்த பதவியில் அமர முடிந்தது . அதன் பிறகு இருபது ஆண்டுகளில்  நடந்த ஆறு சட்ட மன்ற தேர்தலிலும் தெலுங்கானா பகுதியை சார்ந்த எவராலும் முதல் அமைச்சர் பதவில் அமர முடியாத நிலை ஏற்பட இன்றைக்கு தெலுங்கான சிக்கல் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது .


தனி தெலுங்கானா  கோரி சந்திர சேகர ராவ் தொடங்கிய உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தருவதாக உஸ்மானியா பல்கலைகழக மாணவர்கள் அறிவிப்பு செய்து போராட்டத்தில் இறங்க அவர்களுக்கு ஒய்வு கொடுத்து  இயற்கையும் அதன் பங்கிற்கு புயல் மற்றும் வெள்ளம் என பாதிப்புகளை ஏற்படுத்தி சென்று விட்டது . ஆனால் இன்னும் தெலுங்கான சிக்கல் மட்டும் ஓய்ந்த பாடில்லை .



கடந்த பத்து ஆண்டுகளில் தெலுங்கானா பகுதியில் எந்த விதமான உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை ஆனால் ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தபட்டு உள்ளது . மகபூப் நகர் மாவட்டத்தில் இருந்து மட்டும் சுமார் 33 % பேர் வரட்சியின் காரணமாக புலம் பெயர்ந்து வெளி மாநிலங்களில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் .ஆந்திரா மற்றும் ராயல்சீமா பகுதியில் பாலின் விலையை 24 ரூபாய் கொடுத்து வாங்கும் அரசு தெலுங்கானா பகுதியில் 22 ருபாய் மட்டுமே வழங்கபடும் என வேறுபடுத்தி பார்க்கிறது . கிருஷ்ணா , கடப்பா , குண்டூர் ஆகிய இந்த மூன்று மாவட்டத்தில் மட்டும் 25 அரசு கல்லூரிகள் இருக்கிறது ஆனால் தெலுங்கானாவிற்க்கு உட்பட்ட ரங்கா ரெட்டி மாவட்டத்தில் மட்டும் ஒரு அரசு கல்லூரி கூட இல்லை . 2005 -2008 ஆண்டுகளில் ஆந்திரா அரசு 20000 கோடி ரூபாய்க்கு நிலங்களை பன்னாட்டு நிறுவங்களுக்கு விற்பனை செய்து இருக்கிறது ஆனால் அதன் மூலம் ராயலசீமா மற்றும் ஆந்திரா பகுதிகளில் மட்டுமே வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது திட்டமிட்டே தெலுங்கானா பகுதி புறக்கணிக்க படுகிறது . தெலுங்கானா பகுதியின் வளர்ச்சிக்காக அரசு 28% மட்டுமே நிதி ஒதுக்குகிறது அதையும் சிறப்பான முறையில் செய்வது இல்லை .

எல்லாவற்றிக்கும் மேலாக என் . டி. ராமராவ் முதல்வராக இருந்த போது அரசு பணிகளில் தெலுங்கானா பகுதியில் இருப்பவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பிறப்பித்த அரசானை ( Go: No: 610 )  கிடப்பில் போட பட்டு உள்ளது . இப்படி பல்வேறு செய்திகளை தெலுங்கானா பகுதி முழுவதும் சந்திரசேகர ராவின் தெலுங்கானா  ராஸ்ட்ரிய சமிதி கட்சி தெலுங்கானா ஏன் வேண்டும் ? என பரப்புரை மேற் கொண்டதின் விளைவு தெலுங்கானா பகுதியில் கடந்த ஆண்டு நடந்த இடை தேர்தலில் மகத்தான  வெற்றி பெற்றார்கள் ,மாணவர்களின் ஆதரவும் பெருகிவரும் நிலையில் இந்த சிக்கலுக்கு எப்படியாவது ஒரு தீர்வு காண ஸ்ரீகிருஷ்ணா குழு நியமிக்கப்பட்டது . அதன் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு அனைத்து கட்சியில் இருந்து இரண்டு பிரநிதிகளை ப.சிதம்பரம் அழைக்க மறுப்பு தெரிவித்து விட்டார் சந்திர சேகர ராவ் . 

ஒரு வழியாக ஜனவரி 5 ,ஆம் தேதி ஸ்ரீ கிருஷ்ணா அறிக்கை வெளியானது ஆந்திரா மாநிலத்தை பிரிக்க வேண்டுமானால் அதை எப்படி பிரிக்கலாம் ,  ஹைதராபாத் யூனியன் பிரதேசமாக மட்டுமே இருக்க வேண்டும் .என்று கருத்துகள் சொல்ல அந்த அறிக்கையை எல்லாம் உஸ்மானியா பல்கலை கழக மாணவர்கள் தீயிட்டு கொளுத்தி வருகிறார்கள் . வன்முறை காட்சிகளை தொலைகாட்சியில் காண்பிக்க தடை போட பட்டு உள்ள நிலையில் , தனி தெலுங்கானா வேண்டி மீண்டும் உண்ணாவிரதம் இருக்க போவதாக ராவ் அறிவிப்பு ,புது கட்சி தொடங்கும் எண்ணத்தில் யாத்திரை போகும் ஜகன் மோகன் ரெட்டி , தெலுங்கான கூடாது என முரண்பட்டு நிற்கும் சந்திர பாபு நாயுடு ,  யாரோடு கூட்டு சேருவது என முழிக்கும் சிரஞ்சீவி.இப்படி ஆந்திராவில் அரசியல்  காட்சிகள் தினமும் மாறி வரும் நிலையில் .

தெலுங்கானாவை பிரிப்பதா வேண்டாமா என்பதை விட காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் பிளவுபடாமல் இருக்க வேண்டும் என முயற்சியில் ஈடுபட்டு வருகிறது காங்கிரஸ் மேலிடம் .

-- தமிழரின் குரல்







Read more...

காந்தி மகாத்மா அல்ல ..........

>> Monday, December 20, 2010



"புரட்சிக்கு அதிருப்தி மட்டுமே காரணமாக இருந்து விட முடியாது மாறாக நியாயத்தின்  மீது செம்மையான நம்பிக்கையும் , அரசியல் மற்றும் சமுக உரிமைகள் குறித்த தேவையையும் அதன் முக்கியதுவத்தையும் நாம்  உணர்ந்து இருக்க வேண்டும்"  என்று முழங்கியதோடு மட்டும் நின்று விடாமல் தன்னுடைய போராட்டங்களுக்கு சமுகத்தில் உள்ள  ஏற்ற தாழ்வு தான் காரணம்  என்று நிருபித்து காட்டியவர் புரட்சியாளர் அம்பேத்கர் . தன் வாழ் நாளில் அவர் பேசிய பேச்சுகளோ , எழுத்துகளோ எந்த வகையிலும் சாதிய உணர்வையோ , சாதிய மோதலையோ தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது என்று எவராலும் எப்படி சுட்டி காட்ட முடியாதோ, அதே போல  அவரின் களப்பணி என்பது சாதியத்திற்கு எதிரானது  என்பதை நாம் மறக்க முடியாது . அவர்  இந்தியாவின் சமுக தளத்திலும் , தத்துவ தளத்திலும் , பண்பாட்டு தளத்திலும் குறிப்பாக அரசியல் தளத்திலும் ஏற்படுத்திய எழுச்சியின்  விளைவுகளை பொருத்து  கொள்ள முடியாதவர்கள் அம்பேத்கருக்கு சாதி தலைவர் என்றும்  காந்திக்கு எதிரானவர் என்றும் சொல்லி வருகின்றார்கள் .

நாங்கள் தாழ்த்தபட்டவர்கள் எங்களுக்கு உணவு கொடுங்கள் , உடை கொடுங்கள் , தங்க இடம் கொடுங்கள் என்று அம்பேத்கர் கேட்டு இருந்தால் இன்றைக்கு அவரை எல்லா தரப்பு மக்களும் ஏற்று கொண்டு இருப்பார்கள் ஆனால் சமுகத்தில் பிறப்பால் தாழ்த்தபட்டவன் என்கின்ற பழி , வாழ்வதற்கு சேரி என்னும் சிறை , பொது இடத்திற்கு நுழைய தடை ,பொருளாதார நிலையை பொறுத்தவரை ஆண்டைகளுக்கு அடிமை , இந்த இழிவு நிலையை விட்டு வெளியேற எங்களுக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்று போராடியதால் அம்பேத்கரை இன்றைக்கும் சாதி பிரியர்கள் ஏற்று கொள்ள தயாராக இல்லை . அம்பேத்கர் சமுக தளத்தில் சாதியை எதிர்த்தார் , தத்துவத தளத்தில் மதங்களையும் , கடவுளையும் எதிர்த்தார்  , பண்பாட்டு தளத்தில் நான் இந்து அல்ல என்பதை நிருபிக்க பௌத்தத்தை தழுவினார் .இப்படி அம்பேத்கர் செய்தது அனைத்துமே ஒரு குறிப்பட்ட சமுகத்தின் விடுதலைகாக தான் என்று பலரும் நினைத்து  கொண்டு இருகின்றார்கள் . ஆனால் ஒடுக்கபட்டோரின் வடுதலை என்பது ஒரு நாட்டின் விடுதலை என்பதை காந்தி உட்பட யாரும் புரிந்து கொள்ள வில்லை. காந்தியாருக்கு அம்பேத்கரோடு ஏற்பட்ட முரண்பாடு என்பது அவர் ஒடுக்க பட்ட மக்களின் உரிமைக்காக போராடுகிறார் 
என்பது அல்ல , அந்த போராட்டம்  இந்து மதத்திற்கு  எதிரானது என்பது மட்டுமே .


 இந்தியாவின் விடுதலை விரும்பிய காந்தியார் அம்பேத்கரின் இலக்காண ஒடுக்க பட்ட மக்களின் விடுதலையை விரும்பாதது ஏன் ? இன்னும் சொல்ல போனால் எங்கே அந்த விடுதலை அம்பேத்கர் தலைமையில் ஒடுக்கப்பட்ட மக்கள் பெற்று விடுவார்களோ என்கின்ற அச்சத்தில் அவரின் எல்லா கோரிக்கைக்கும் எதிர் கருத்தை பதிவு செய்ததோடு மட்டும் அல்லாமல் உண்ணா நிலை போராட்டம் என்று அச்சுறுத்த  தவறியது இல்லை . உலகத்தின் பார்வையில் இவர் அகிம்சை விரும்பும் தலைவர் என்கின்ற பெயரையும் சுலபமாக பெற்றார் . ஏதோ அம்பேத்கர் என்ற தலைவர் கையில் ஆயுதம் ஏந்தியதை போல இன்றைக்கும் உலகத்தில் உள்ள எல்லா தலைவர்களும் காந்தியை மகாத்மா என்று அவர்களுக்கு தெரிந்ததை சொல்லி வருகின்றார்கள் .

ஆனால் அம்பேத்கர் காந்தியாரை மகாத்மா என்று ஏன் தன்  வாழ்நாளில் ஒரு முறை கூட அழைத்தது  இல்லை என்று தெளிவு படுத்துகின்றார் , 1955 ஆம் ஆண்டு, டிசம்பர் 31 அன்று B.B.C.க்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ 






அம்பேத்கர் என்னும் ஒரு தேச தலைவர் இந்தியாவின் இதய துடிப்பான அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றி இருந்தாலும் ,  ஒடுக்க பட்ட மக்களுக்கு குரல் கொடுத்தார் என்கின்ற ஒரு காரணத்தினாலேயே சாதி பிரியர்களின் பார்வையில் அம்பேத்கர்  சாதி தலைவராகிவிட்டார் , காந்தி தேச தந்தை ஆகிவிட்டார் , அதனால் தான் இன்றைக்கும் சிறைபடுதபட்ட அம்பேத்கர் சிலைகள் இந்தியாவில் அதிகம் இருக்கிறது . 


சேரிகளே ,
தேர்தல் நெருங்குகிறது ....
நம் குடிசை எரித்த  கும்பல் ஓட்டு கேட்டு வரும் 
அம்பேத்கர் பெயரையும் சொல்லி கொண்டு வரும் 
தயாராக இருங்கள்
 வரவேற்க அல்ல .... விரட்டி அடிக்க !! 

- தமிழரின் குரல் 

Read more...

சிறையில் இருந்து சீரிபாய்ந்த சிங்கம் சீமான்....

>> Sunday, December 19, 2010



சிறையில் இருந்து சீரிபாய்ந்த சிங்கம் சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..............வரவேற்கின்றோம்...!

Read more...

மாவீரர் நாள்...நவம்பர்-27


உலக தமிழரின் தாகம்,தமிழீழ தாயகம்.........

Read more...

போனால் போகட்டும் போடா ....




தேர்தல் என்றால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில்  தமிழ் நாட்டில் 2011    ஆம்  ஆண்டு நடை பெற  உள்ள சட்ட மன்ற தேர்தலுக்கு பின்பு  காணமல் போய் விட கூடாது என்கின்ற முனைப்பில் தமிழக தலைவர்கள்,  தங்கள் கட்சியின் நிலைபாட்டை விட மற்ற கட்சிகள் என்ன முடிவு எடுக்க போகிறார்கள் என்பதில் அதிக ஆர்வம் காட்டி வரும் இச்சூழலில் " காங்கிரஸ் கட்சிக்கு நாங்கள் நிபந்தனையற்ற  ஆதரவு தருகிறோம்"  என்று அறிவிப்பு செய்து அ.தி.மு .க கூட்டணியில் உள்ள தோழமை கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார் ஜெயலலிதா.

தமிழ் ஈழ ஆதரவும் - அரசியல் கட்சிகளும் :

தமிழ்நாட்டில் விடுதலை புலிகள் இயக்கத்தையும் தமிழ் ஈழ ஆதரவு நிலைபாட்டையும் கொண்டுள்ள இயக்கங்கள் பல இருந்தாலும் தேர்தல் களத்தில் இருக்கும்  கட்சிகளில் ம.தி.மு.க.  விடுதலைச்  சிறுத்தைகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, ஆகிய இந்த மூன்றும் தான். ஆனால் இந்த மூன்று கட்சிகளும் இது வரை ஒரே அணியில் இருந்து கொண்டு தேர்தலை சந்திக்க வில்லை என்பது தமிழ் உணர்வாளர்களுக்கு வருத்தமான செய்தி தான் என்றாலும்  இவர்கள் சேர கூடாது என்கின்ற சக்திகளின் எண்ணம் தான் இது வரை நிறைவேறி உள்ளது . இதனாலேயே என்னவோ  தமிழ் ஈழ சிக்கல் தமிழ் நாட்டு   தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்காமல் போய்விட்டது.

2009  ஆம் ஆண்டு நாடாளமன்ற தேர்தல் நடைபெற இருந்த நிலையிலாவது இந்த கட்சிகள் ஒன்று சேரும் என்ற தமிழர்களின் எண்ணமும் வீணாய் போனது.

 ஜெயலலிதாவோடு கூட்டணியில் சேர முடியாத  நிலையில் திருமாவளவன்   தி.மு.க வோடு  இருக்க முடியாத மருத்துவர்,  ஜெயலலிதாவின் கூட்டணியை விட்டு வெளியேற முடியாத வைகோ. இப்படி மூன்று இயக்கத்திற்கும் இருந்த சிக்கல்களை கடந்து இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் என்கின்ற பெயரில் ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுத்ததை எந்த தமிழ் உணர்வாளரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது. முத்து குமார்  உள்ளிட்ட தோழர்கள்  தீ குளிப்பு, திருமாவளவன் உண்ணா நிலை போராட்டம், சீமான் கைது, தொடர்ச்சியான போராட்டம், என தமிழக அரசியல் தலைவர்கள் ஒன்றாய் இருந்த  நிலையில் ஏனோ தேர்தல் கூட்டணி என்று வந்த உடனேயே பிளவு ஏற்பட்டது .


மார்ச் ௦09,2009 




2009 ஆண்டு பொங்கல் அன்று திருமாவளவன் தொடர் உண்ணாவிரதம் இருந்த போது கலந்து கொள்ளாத வைகோ,  மார்ச் 09’2009 அன்று  ஜெயலலிதா  இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்த போது வாழ்த்தி பேசி உண்ணா விரதத்தை முடித்து வைத்தார். மருத்துவரும் அதன் பிறகு சிறிது  நாட்கள் கழித்து   ஜெயலலிதாவை சந்திக்கஅ.தி.மு.க அணி தான் ஈழத்திற்கு ஆதரவான அணி  என்று அறிவிப்பு செய்தார்கள். நெடுமாறன், சீமான் என தமிழ் உணர்வாளர்களும் இந்த அணியின் வெற்றிக்காக பிரசாரம் செய்தார்கள் உலக தமிழர்கள் மத்தியிலும் ஜெயலலிதா தான் தமிழ் ஈழம் பெற்று தருவார் என்கின்ற நம்பிக்கையை ஏற்பபட செய்தார்கள் பல இணையதளங்களும்  இதை முன் வைத்து செய்திகளையும் வெளியிட்டார்கள். ஆனால்  பழ. நெடுமாறன் நினைத்து  இருந்தால் கண்டிப்பாக.வைகோ , திருமா, மருத்துவர், அறிவுமதி ,சீமான், சுபவீர.பாண்டியன் , வீரமணி , கொளத்தூர் மணி என பல தமிழ் உணர்வாளர்களை ஒன்று படுத்தி இருக்க முடியும் , குறைந்த  பட்சம் தனி அணியில் உடன்பாடு கொண்டு இருந்த திருமாவை யாவது வைகோவோடு சேர்ந்து தனி அணி அமைக்க முயற்சி செய்து இருக்கலாம்    மாறாக ஜெயலலிதாவிற்கு  பின்னால் அணி திரண்டு ஏன்  இன்று வரை நிற்க வேண்டும் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. 

ஈழத்திற்கு ஜெயலலிதா செய்தது என்ன ? 

ஜெயலலிதா அ.தி.மு.க வின் தலைமை பொறுப்பை ஏற்ற நாளில் இருந்தே தமிழ் ஈழ ஆதரவு நிலையில் நாட்டம் கொள்ளாமல் தான் இருந்து வருகிறார், அவ்வப்போது விடுதலைப்  புலிகளுக்கு எதிராக கருத்து சொல்லுவதும், போர் நடந்தால் மக்கள் சாவது இயல்பு தான், விடுதலை புலிகள் சர்வேதேச பயங்கரவாதிகள் என்று வழக்கமாக அவர் சொல்லி வந்ததோடு  தான் முதல் அமைச்சராக இருந்த போது  "பிரபாகரனை தமிழகம் கொண்டு வந்து தூக்கில் போட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்", இப்படி தன்னுடைய ஈழ எதிர்ப்பு நிலையை  வெளிபடுத்த அவர் தயங்கியது இல்லை. வைகோ, நெடுமாறன் , சுப வீர பாண்டியன் என பல தலைவர்களை  ஈழத்திற்க்கும் , புலிகளுக்கும் ஆதரவாக பேசியதினால் சிறைப்படுத்தினார்.   

2006  - 2010 இல்  எதிர்க்கட்சி தலைவராக சட்டசபைக்கு ஐந்து முறை சென்று உள்ளார் அதில் 2008 ஆம் ஆண்டு  விடுதலை புலிகளுக்கு ஆயுதம் கடத்தும் விடுதலை சிறுத்தைகளின் வன்னிய அரசை  கைது செய்ய வேண்டும் என்று பேசினார் , பிறகு அந்த கட்சி நடத்தவிருந்த  தமிழ் ஈழ அங்கீகார மாநாட்டிற்கு தடை விதிக்க சொல்லி பேசினார் . 

தமிழக முதல்வர் கருணாநிதி விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு செயலாளர் சுப தமிழ்ச்செல்வன் இறந்த போது கவிதை எழுதியதை கண்டித்து இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களுக்கு கடிதம் எழுதினார். 2009 ஆம் ஆண்டு  தேர்தல் நெருக்கத்தில்  பிப்ரவரி 18, அன்று ஒரு திருமண விழாவில் "அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் அது காங்கிரஸ் கட்சிக்கு லாபம் என்று தெரிவித்தார்" . ஆனால் அன்றைக்கு  இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் இது தேர்தல் யுக்தி என்று சொல்லி கொண்டு தங்களை தானே சமாதானம் செய்து கொண்டார்கள்.  

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சீமான் தனக்கு ஆதரவாக பேசி போது அமைதி காத்தவர்   இன்றைக்கு அவர் சிறையில் இருக்கும் போதும் அதே அமைதி தான் காத்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு டைம்ஸ் நொவ் என்கின்ற தொலைக்காட்சிக்கு அளித்து உள்ள பேட்டியில் வெளிப்படையாக சொல்லி விட்டார் ஜெயலலிதா  தன் காங்கிரஸ் ஆதரவு நிலையை. 


நிலைமை இப்படி இருக்க , ஆனாலும் அவரோடு ஒரே கூட்டணியில் தாங்கள் இருப்பது ஈழ சிக்கலுக்கு அல்ல மாறாக வேறு வழி இல்லாமல் தான் என்று தங்களை புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லும் கட்சிகள் சொல்ல முடியுமா ??

ஒரு வேலை காங்கிரஸ் - அ.தி.மு.க.கூட்டணி ஏற்பட்டால் இப்போது  கூட்டணியில்  இருக்கும் கட்சிகளுக்கு அம்மா சொல்ல போகும் பதில் இதுவாக தான் இருக்கும் 

போனால் போகட்டும் போடா .....................

                                                       - தமிழரின் குரல் 

Read more...

மானமுள்ள தமிழா நமக்கு ஏன் தீபாவளி...?


உலமெங்கும் தீபாவளி தீபாவளி என்று உற்சாக மிகுதியில் வரலாற்றின் வழித் தெரியாமல் ஆர்பரிக்கும் இந்த வேளையில் இந்த செய்தி இப்படி, ஒரு கேள்வி தேவைதானா என்று கேட்பவர்களுக்கு …..
தீபாவளியை யார் கொண்டாடுகின்றார்கள் இந்துக்கள். இது ஒரு இந்து விழாவாகவும் பிரபலம் பெற்றுள்ளன. இந்துக்களின் இதிக்காசம் என்று சொல்லப்படுகின்ற நூலான இராமாயணம் என்ன கூறுகின்றது ? இராமன் கடவுளாகவும், இராவணன் அசுரனாகவும் சொல்கிறது. அதேவேளையில் இராமன் அய்யோத்தியின் அரசன் என்றும் இராவணன் இலங்கையின் அரசனாகவும் தெரிவிக்கின்றது. அப்படி என்றால்  இரண்டு அரசர்களும் வாழ்ந்துள்ளார்கள் என்று அறிய முடிகிறது. தொல்லியல் அதாரமுடன் பார்க்கும் பொழுது இலங்கை என்பது திராவிட நாட்டின் தலை நகரமாக விளங்கி உள்ளன. திராவிட நாடு என்று சொன்னால் தற்பொழுது உள்ள தமிழகமும் இலங்கையும் தான். சுமார் கி.மு 700 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடல்கோளினால் தமிழகமும் இலங்கையும் தனியாக உருவாகியுள்ளன.
தமிழர்கள் என்று சொல்லிகொள்கின்ற நமக்கெல்லாம் எந்த நாடு பூர்விகம் ? திராவிட நாடுதானே ? அதைனை ஆண்ட அரசன் யார் இராவணன் தானே ? நம் நாட்டை ஆண்டவன் இராவணன் என்றால் அவன் தானே நமக்கு அரசன்? அவன் தானே நமக்குத் தலைவன் ? அவன் தானே மூதாதை ? அவன் தானே நம் கொள்ளு பாட்டனுக்கு கொள்ளு பாட்டன் ?  அய்யோத்தியா நாட்டை ஆண்ட இராமனா நமக்குத் தலைவன் ?.
அப்படி இருக்க நம்முடையத் தலைவனை கொன்று விட்டு அரக்கனை அழித்துவிட்டோம் என்று கூறி. அந்நாளை  கொண்டாடின்னார்கள்  இராமனும் அவரின் சகாகளும், அவரின் இனமும். அந்த மாபெரும் வீரன், நம் தலைவன் வீரமரணமடைந்த நாளை நாம் புத்தாடை உடுத்தி, இனிப்பு வழங்கி கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம் அல்லவா. மானமுள்ளத்தமிழன் என்று சொல்லிக் துக்க நாளை இன்ப நாளாக கொண்டாடுவது நமக்கு தேவைதானா? நாம் கொண்டாடலாமா? சிந்தித்து பார் மானமுள்ள தமிழா..!
-   தமிழரின் குரல்


மேலும் தகவலுக்கு தமிழ் செய்திகள் வலைப் பூ மற்றும் யாழ் இணையம் (http://tamilseithekal.blogspot.com/2009/10/blog-post_2187.html)
இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குறியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான்..
உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன்.

http://www.tamilweek.com/images/King_Ravanan_Thirukoneswaram.jpghttp://t2.gstatic.com/images?q=tbn:eSVOsDvokm2fEM:http://chat.carleton.ca/~jshanthi/trincoonline/ravana.jpg


இராவணன்


இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாக இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல - "வானோடும் களம் இறங்குமிடம்" போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவனாகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகிறன

இராமாயணத்தில் இராவணன்

இராமாயணத்தில் இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்தி சென்றதாகவும், இலங்கையில் சிறைவைத்துத் திருமணம் செய்ய எத்தனித்ததாகவும். இவன் பல பெண்களை பலாத்கரமாக தன் மனைவிகளாக அடைந்ததாகவும் சித்தரித்தனர். மண்டோதரி, வேதவதி, ரம்பா ஆகியோர் இவர் மனைவியர்கள்.

இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன - நாட்டு நிலைமை பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து இப்படிச் சொல்வது வழக்கம். அதாவது இராமன் ஆண்டால் நாடு நன்றாக இருக்கும் என்றும், இராவணன் ஆண்டால் நாடு மோசமாக இருக்கும் என்றும் கர்ண பரம்பரையாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். உண்மையில், இராமன் ஆட்சி என்று சொல்லப்படுவது, சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த செருப்பின் ஆட்சிதான். அந்த ஆட்சியின்போது இராமனும் சீதையுமே காட்டில் திரிய வேண்டியிருந்தது என்றால், அந்த நாட்டு மக்கள் எங்கெங்கே திரிந்திருப்பார்களோ! வனவாசம் முடிந்து நாடு திரும்பிப் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பிறகாவது ராமனால் சிறப்பாக ஆட்சி செய்ய முடிந்ததா? இல்லை.... யாரோ எதையோ சொன்னார்கள் என்று மனைவி சீதையை தீக்குளிக்கச் செய்த பெண்ணடிமைத்தனம்தான் அந்த ஆட்சியில் நிலவியது. அதன்பிறகும் அவளைக் காட்டுக்கு அனுப்பிவிட்டான் மகாராசன் இராமன். இப்படியெல்லாம் சீதை என்ற பெண் தன்னந்தனியாக திரிய வேண்டியிருந்ததை மனத்தில் வைத்துத்தான், நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியும், “நடு இரவில் ஒரு பெண் உடல் நிறைய நகைகளை அணிந்துகொண்டு தன்னந்தனியாக நடக்கும் சூழ்நிலை இந்த நாட்டில் எற்பட்டால் அதுவே இராமராஜ்ஜியம்என்றார் போலும்.

இராவணன் ஆட்சி எப்படி நடந்தது? அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஒங்கியிருந்த சூழலையும் கம்பன் வர்ணித்திருக்கும் விதத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். நல்லது நடப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்காரர்கள் அதைக் கெடுக்க நினைப்பது போல, ஓங்கியுயர்ந்த மாளிகைகளைக் கொண்ட இலங்கையை இராம பக்தனான அனுமன் தன் வாலில் பற்றிய தீக் கொண்டு அழித்ததையும் இராமாயணம் வர்ணிக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இராமனின் அயோத்தியைவிட ஆயிரம் மடங்கு உயர்வானதாகவே இருந்திருக்கிறது இராவணன் ஆண்ட இலங்கை. அப்புறம் என், நல்ல ஆட்சியை இராமன் ஆட்சி என்றும் மோசமான ஆட்சியை இராவணன் ஆட்சி என்றும் சொல்கிறோம்?

இந்தக் கேள்விக்கான விடையைத்தான் 60 ஆண்டுகளுக்கு முன்பு உரக்கச் சொல்லின திராவிட இயக்கங்கள். ஆரிய ஆதிக்கத்தின் விளைவால், தமிழ் மகாகவியான கம்பன் ஆரியத்தின் தாசானு தாசனாகி, வால்மீகியையும் மிஞ்சிடும் வகையில் கற்பனைப் பாத்திரங்களான இராமனைத் தெய்வம் என்றும் தமிழ் மன்னனான இராவணனை அரக்கன் என்றும் சித்திரித்து இராமாயணத்தைப் படைத்தான். கவிச்சுவையிலும், பக்தி சொட்டும் தமிழிலும் கம்பன் பின்னி எடுத்திருந்த காரணத்தால் இராமனே நமக்கும் தெய்வமானான். தமிழ் மன்னனான இராவணன் அரக்கன் ஆனான். இந்த ஆரியப் பண்பாட்டு படையெடுப்பை விரட்ட வேண்டும், காப்பியங்கள் வழியாகத் தமிழ் மக்களின் மனங்களில் வரையப்பட்டுள்ள இழிவான சித்திரம் அழிக்கப்படவேண்டும் என்பதைத் திராவிட இயக்கங்கள் போர்க்குரலோடு வலியுறுத்தின. கம்பராமாயணம் தமிழர்களை இழிவுபடுத்தும் காப்பியமே என்பதை நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும், அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களுடனும் மேடையில் வாதிட்டு வென்று காட்டினார் பேரறிஞர் அண்ணா.

அடுத்தவன் எழுதியதைக் குற்றம் சொல்லத்தான் தெரியுமா? தமிழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் உங்களால் ஒரு காப்பியத்தை படைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பியவர்களும் அப்போது உண்டு. அத்தகையவர்களின் வாயை அடைக்கும் விதத்தில் புலவர் குழந்தை அவர்களால் படைக்கப்பட்டதுதான் இராவண காவியம். வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணன் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்கும் மாற்றுக் காப்பியத்தைப் படைத்தார் புலவர் குழந்தை. அவரது படைப்பு, கற்பனைப் பாத்திரமான இராவணனின் பழியை மட்டும் துடைக்கவில்லை. நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமைகளையும் மீட்டெடுத்தது. இலக்கியத்தின் இலக்கு எதுவாக இருக்கவேண்டுமோ அதனை உணர்ந்து செய்யப்பட்டதே இராவண காவியம் எனும் பெருங்காப்பியம்
குடும்பம்

இராவணனது தந்தை வைச்ரவ மகரிஷி ஆவார். வீடணன், கும்பகர்ணன், சூர்ப்பணகை ஆகியோர் உடன் பிறப்புகளாவர்
வேத வித்தகன்

இராவணன் சாம வேதத்தில் நிபுணத்துவம் பெற்றவன். இதனை இராமாயணமே எடுத்தியம்புகிறது. இவன் தனது கை நரம்புகளால் சாம கானம் பாடி சிவனை மகிழ்வித்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது.
கைலாயத்தைத் தூக்கும் இராவணன் (இராவணன், பத்துத் தலை கொண்ட இலங்கை அரசன். இராமனுக்கு எதிரியான இவன் மிகச் சிறந்த சிவபக்தன். புராணங்களில் இராட்சசனாகச் சித்தரிக்கப் படுபவன்.)

கைலாயத்தை தன் நாட்டில் வைக்க விரும்பிய இராவணன் வடக்கே சென்று, எந்த வித கடினமும் இல்லாமல் இமயத்தைத் தூக்கி தன் நாடு நோக்கி நடந்தான். மலையில் திடீரென ஏற்பட்ட ஆட்டத்தை உணர்ந்த பார்வதி தேவி பாதுகாப்பு வேண்டி சிவனிடம் ஓட, நடந்ததை அறிந்த சிவன், இராவணனுக்கு ஒரு பாடம் புகட்ட விரும்பி தன் இடது கட்டைவிரலால் மலையை சற்று அழுத்த, தப்பிக்க வழியின்றி கீழே மாட்டிக் கொண்டான் இராவணன். ஆனால் சிவபக்தர்களுக்குத் தெரியும் சிவனை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று. தன் தொடை நரம்பினால் வீணை போன்ற ஏற்பாடு செய்து, சாம வேதப் பாடல்களைப் பாட, மனம் இரங்கினார் சிவ பெருமான், இராவணனைச் செல்ல அனுமதித்தார். மற்ற தெய்வங்களுக்கு சொல்லப்படாத சிறப்பு இதுவே. சிவபெருமானுக்கும் அவர்தம் அடியார்களுக்கும் மிகச் சிறந்த உறவு உண்டு. ஒருத்தரை யொருத்தர் மதிக்கும் பண்பு வந்துவிட்டார் ஏது இங்கே பிரச்சினைகள்?

இராவணன் நீர்வீழ்ச்சி

இராவணன் நீர்வீழ்ச்சி இலங்கையின் ஊவா மாகாணத்தில் கிரிந்தி ஆற்றில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும். இது எல்லை - வெள்ளவாயா பெருந்தெருவிற்கு அருகே அமைந்துள்ளது. பாதையில் இருந்தபடியே இதனை பார்வையிடமுடியும். இதன் நீர் ஊற்று வெவதன்னை மேட்டுநிலக்காடாகும். நீர்வீழ்ச்சி மூன்று படிநிலைகளில் பாய்கிறது. முக்கிய பாய்ச்சல் 9 மீட்டர் (30 அடி) மட்டுமேயாகும். நீர்வீழ்ச்சி சுண்ணாம்புக்கல் பறையில் அமைந்துள்ளது எனவே பாறை அறிப்பு துரிதமாக நடைபெறுகின்றது.
மானசரோவர் ஏரி கைலை மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி என்று கருதப்படுகின்றது. இதன் அருகே ராட்சதலம் ஏரியும் உள்ளது. இந்த ராட்சதலம் ஏரியில் இருந்து இராவணன் தவம் புரிந்ததாக ஒரு கதை உள்ளது.

மானசரோவர் ஏரி கைலை மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி என்று கருதப்படுகின்றது. இதன் அருகே ராட்சதலம் ஏரியும் உள்ளது. இந்த ராட்சதலம் ஏரியில் இருந்து இராவணன் தவம் புரிந்ததாக ஒரு கதை உள்ளது.

இராவணன் நீர் வீழ்ச்சி இராமாயணத்தோடு தொடர்புடையதாக நம்பப்படுகிறது. நீர்வீழ்ச்சிக்கு பின்னால் அமைந்துள்ள குகையில் சீதையை இராவணன் மறைத்து வைத்திருத்தார் என்பது தொன்மையான நம்பிக்கையாகும்.

இராவணன் காலத்து ஆலயங்கள்
இந்தப்பதிவில் இராவணன் காலத்து ஆலயங்கள், இராவணனின் வேறு சில வரலாற்று எச்சங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

இராவணன் காலத்து ஆலயங்கள் என்று குறிப்பிடுவதனால் அவை இராவணனால் கட்டப்பட்டன என்று பொருள் இல்லை. விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கையில் இருந்த சைவாலயங்கள் என்று இவற்றைக்கூறலாம். விஜயனின் வருகைக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த இயக்கர் நாகரின் ஆட்சியில் அக்காலத்து மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. அக்கால மன்னர்களில் இராவணன் குறிப்பிடக்கூடிய ஒருவனாகையால் இவ்வாறு இராவணன் காலத்து சைவாலயங்கள் என்று குறிப்பிட்டேன்.

"வித்துசேசன் இருபத்தொன்பது வருடங்களும், மூன்று மாதங்களும் இலங்கையை ஆண்டான். இவனுக்குப் பின் இவனது மகன் சுகேசன் என்பவன் மணிபுரம் என்னும் கதிரவன் மலையைத் தலைநகராக்கி இலங்கையை ஆட்சி புரிந்தான். ஆதிகாலத்தில் மயனால் கட்டப்பட்ட திருக்கேதீசுவரம், முனீசுவரம், நகுலேசுவரம் என்னும் சிவாலயங்களை சுகேசன் பழுது பார்த்து அவற்றுக்கு அநேக நகைகளையும், நிலங்களையும் கொடுத்தான். " இவ்வாறு கணபதிப்பிள்ளையின் இலங்கையில் புராதன சரித்திரம் என்ற நூலில் கூறப்படுகின்றது. சுகேசன் என்பவன் இராவணனுக்கு முன்னைய காலத்தில் இலங்கையில் ஆண்ட ஒரு மன்னன் என்பது பற்றி முந்தய பதிவில் பார்த்தோம்.

இதைவிட.....இலங்கையில் விஜயமன்னன் குடிகளை வசப்படுத்தும் நோக்குடன் சமய வழிமுறைகளை சரியாக கடைப்பிடித்தான். இலங்கையில் ஆட்சியை அமைக்கு முன்னரே நாலு திசைகளிலும் சிவாலயங்களை எழுப்பினான். கீழ்திசையில் கோணெசர் கோவிலையும், மேல்திசையில் கேதீச்சர கோவிலையும் பழுதுபார்த்து, அக்கோவில்களில் பூசை நடாத்தும் பொருட்டு காசிப் பிராமணர்களை அழைத்துவந்தான் எனக் யாழ்ப்பாண வைபமாலையில் கூறப்படுகின்றது.

இதிலிருந்து விஜயனின் வருகைக்கு முன்னரே இலங்கையில் இருந்த ஈழத்தின் பழமைவாய்ந்த சைவாலயங்கள் இவை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வாலயங்க்ள் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.

திருக்கேதீஸ்வரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள மன்னார் மாவட்டத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிவன்கோவில். ஈழத்தின் பழங்குடியினராய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது. இச்செய்தியால் சைவசமயிகளின் தொன்மையையும் பெருமையையும் இத்திருக்கோயில் இயம்புகின்றது.

திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையில் திருகோணமலையில் உள்ள திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். இதுவும் இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா என்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன. சிவபக்தனாகிய இராவணனால் இங்குள்ள சிவலிங்கம் தாபிக்கப்ப்ட்டதாக ஐதீகம்.

இதுதவிர புத்தள மாவட்டத்தில் சிலாபம் என்ற இடத்தில் காணப்படுகின்ற முன்னேஸ்வரம், வடபதியில் கீரிமலைப்பகுதியில் அமைந்துள்ள நகுலேஸ்வரம், தென்பகுதியில் காணப்படுகின்ற தொண்டீஸ்வரம் ( சரியாக தெரியவில்லை ) என்பன இலங்கையில் ஆதிக்குடிகளான இயக்கர் நாகர் என்ற இனத்தவர்கள் காலத்து ஆலயங்களாகும். இவ்வாலயங்கள் யாரால் கட்டப்பட்டன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை என்றே கருதுகிறேன். இவ்வாலயங்கள் பற்றிய பழைய புராணக் கதைகளை பற்றி அறிய முற்பட்ட போதிலும்.. அவை பற்றி எனக்கு ஏதும் தெரியவில்லை. வாசகர்கள் யாராவது தெரிந்திருப்பின் குறிப்பிடலாம். அல்லது அவைகள் பற்றி அறியும்போது அவற்றை இங்கு நான் இணைத்துவிடுகிறேன்.

இங்கு மிகவும் வேதனைப்படக்கூடிய விடயம் என்னவெண்றால்.... தமிழர்களின் தொன்மையைக்கூறும் இவ்வாலயங்கள் சில இன்று சிங்கள மயப்படுத்தப்பட்ட சிங்களவர்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ளன. உதாரணமாக கதிர்காம முருகன் ஆலையத்தையும், மாத்தறை மாவட்டத்தில் தேவேந்திர முனையில் அமைந்துள்ள தொண்டீஸ்வரர் ஆலையத்தையும் குறிப்பிடலாம். போத்துக்கீசரால் அழிக்கப்பட்ட இத்தொண்டீஸ்வரர் ஆலயம் சிங்கள மக்களால் விஸ்ணு ஆலயமாக மாற்றப்பட்டுள்ளது. இது தவிர திருமலை கோணேச்சரர் ஆலயம், கீரிமலை நகுலேஸ்வர ஆலயம், மாந்தோட்ட கேதீச்சர ஆலயம், சிலாபத்து முன்னீஸ்வரர் ஆலயம் என்பன நினைத்தவுடன் சென்றவர முடியாத, மக்களே இல்லாத சூனியப் பிரதேசங்களில் அமைந்துள்ள ஆலயங்களாகும். இவற்றுக்கு சென்றுவர பல கட்டுப்பாடுகள் இராணுவத்தினரால் விதிக்கப் பட்டுள்ளமையால் இக்கோவில்களுக்கு செல்லும் பக்தர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இந்த ஆலயங்கள் தவிர இராவணனுடன் தொடர்புடைய வேறு சில வரலாற்று எச்சங்களைப்பார்க்கலாம்.

இராவணன் வெட்டு

http://t1.gstatic.com/images?q=tbn:ofSprIJHeTXyOM:http://farm1.static.flickr.com/209/472375134_787b92a60e.jpg%3Fv%3D0படத்தில் காணப்படுவது இராவணன் வெட்டு என்று அழைக்கப்படுகின்றது. இது திருகோணமலையில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்துக்கு அண்மையில் அமைந்திருக்கிறது. இதுபற்றிய புராணக்கதைகள் எனக்கு தெரியவில்லை. தெரியக் கிடைத்தால் இங்கு இணைத்து விடுகிறேன். இதுமட்டுமல்ல திருக்கோணேச்சரம் ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் சிவ பக்தனாகிய இராவணனால் தான் ஸ்தாபிக்கப்பட்டதாக ஒரு ஐதீகமும் உள்ளது.
சிகிரியாக் குன்றம்

சிகிரியாக்குன்றமானது 6ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த காசியப்பனால் அமைக்கப்பட்டது என்றுதான் வரலாற்று நூல்களில் காணப்படுகின்றது. இருப்பினும்.... இராவணன் இறுதியாக ஆட்சி செய்த இடம் சிகிரியா, இராவணனின் மறைவுக்கு பின்னர் ஆட்சிப்பொறுப்பை பெற்றுக்கொண்ட விபீஸணன் தனது தலைநகரத்தை சிகிரியாவில் இருந்து களனிக்கு மாற்றினான். இன்றும் களனியில் உள்ள ஒரு விகாரையில் விபீஸணனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் இராவணனின் ஒலைச்சுவடியில் காணப்படுகின்றன என்று தினக்குரலில் அண்மையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் படித்தேன். இது பற்றிய மேலதிக விபரங்கள் தெரியவில்லை.

இராவணன் சிறியகோட்டை பெரிய கோட்டை

இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் கதிர்காமத்திலுள்ள கதிரைமலைமீது (ஏழுமலை) நின்று தென் கடலை நோக்கினால் குடா வடிவிலான கற்சிகரமும், கற்கொடியும் ஒன்று கடற்தளத்தின் மீது தெரிவதனை இன்றும் அவதானிக்கலாம். இந்த இரண்டு பாறைகளும் இராவணனின் சிறிய கோட்டை பெரிய கோட்டை என்று அழைக்கப்படுகின்றன.

இராவணன் ஆட்சி

மகாவம்சதின்படி இலங்கையின் வரலாறு விஜயன் வருகையோடுதான் ஆரம்பிக்கிறது. இருப்பினும் அதற்கு முதலில் இயக்கர் நாகர் என்ற ஆதிக்குடிகள் இலங்கையில் வாழ்ந்ததாக மகாவம்சத்தில் கூறப்படுகின்றது. இவ்வாறு இலங்கையின் ஆதிக்குடிகளாக கருதப்படும் இயக்கர் நாகர் பற்றியும், இவர்களோடு இராவணனுக்கு உள்ள தொடர்புகள் பற்றியும் பல ஐதீகங்கள் பல உள்ளன. இவற்றுக்கு மேலாக இலங்கையானது முதலில் இந்தியத் துணை கண்டத்துடன் முதலில் இணைந்தே இருந்தது பின்னர் ஏற்பட்ட ஒரு கடற்கோள் அழிவின்போது நிலத்தின் பலபகுதிகள் நீரில் தாழ்ந்துபோக இந்திய துணைக் கண்டத்திலிருந்து இலங்கையானது தனிமையாக்கப்பட்டது என்ற ஒரு ஐதீகம் பலரால் கூறப்படுகின்றது. அதற்கு இன்னும் ஒரு படி மேலாக பைபிளில் கூறப்படுகின்ற நோவா காலத்தில் பூமியில் ஏற்பட்ட பேரழிவும் இந்நிகழ்வுடன் சேர்த்து கூறப்படுகின்றன. இவைகள் எல்லாம் வெறும் ஐதீகங்களே தவிர இதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை.
இப்போது இலங்கைத் தீவு உருவான கதைபற்றியும்... அங்கு வாழ்ந்த ஆதிக்குடிகள் பற்றியும் சில ஐதீகங்களை பார்ப்போம்.

புவிநிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன. அவற்றில் ஒரு கண்டமாக இப்போதைய இந்தியாவும் அதனை அண்டிய நிலப்பரப்புகளும் காணப்பட்டன. இக்கண்டங்களை ஆட்சி செய்தவர்களில் மனுச்சக்கரவர்த்தி என்பவனும் ஒருவன். இவனுக்கு சமன் என்று ஒரு மகனும், ஈழம் என்று ஒரு மகளும் இருந்தார்கள். மனுவின் பின்னர் இவ்விருவரும் இக்கண்டத்தை ஆண்டு வந்தனர். தென்பகுதியை சமனும், வடபகுதியை ஈழம் என்று அழைக்கப்பட்ட குமரியும் ஆண்டு வந்தனர். குமரி ஆட்சிசெய்த பகுதிகளை குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டு வந்தது. குமரிக் கண்டத்தில் உள்ள ஒரு நகரில் கன்னியாகிய குமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந்நகரம் கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரிகண்டத்துக்குச் சிலகாலம் தலை நகராகி விளங்கியது.

இந்தக் குமரிக் கண்டத்திலேயே இலங்கை நாடு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன. ஈழம் என்னும் அரசி அட்சி புரிந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என்று அழைக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் ஈழநாடு ஆகியது. இடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதைய இலங்கையை ஏனைய நிலப்பரப்புகளில் இருந்து பிரித்துவிட்டன. இக்கடல் கோள்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் வரலாற்றுச் சான்றுகள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது. சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் அமிழ்ந்தி விட்டது. மிகுதியான நிலப்பரப்பு பாரத கண்டம் இலங்கை முதலிய பல தேசங்களாக பிரிந்தது.

குமரிக்கண்டம் பற்றிய சில ஆதாரங்கள்:-
- சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் குமரிக்கண்டம் பின்னர் அழிவுக்குட்பட்தாக கூறப்படுகின்றது.

- ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஏர்ண்ஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel) கூற்றுப்படி இலேமுரியாக் கண்டத்திலிருந்தே மனித இனம் தோன்றொயிருக்கலாம் எனவும் மேலும் அவற்றின் தொல்லுயிர் எச்சங்கள்பல அக்கண்டம் கடற்கோளால் அழிக்கப்பட்டதனால் கிடைக்கப் பெற இயலவில்லையெனவும் கூறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் சில விஞ்ஞானிகள் இத்தகு கண்டம் பசிபிக் கடல்வரை இருக்கப்பெற்றிருக்கலாம் என்னும் கூற்றையும் தெரிவுபடுத்துகின்றனர். இந்த இலேமூரியாக் கண்டமே குமரிக்கண்டமாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றார்கள்.
அழிவுற்றது எனக்கருதப்பவும் குமரிக்கண்டம்
பின்னர் குமரியின் சந்ததிகளில் தோன்றிய அரசர்களில் பரதன் என்பவனும் ஒருவன். இவன் நாற்பது வருடங்களாக குமரிக்கண்டத்தை ஆண்டுவந்தான். இவனின் ஆட்சியில் இக்கண்டம் செழிப்பாக சிறப்புற்று விளங்கியமையால் பின்னாளில் இக்கண்டத்துக்கு பரதகண்டம் என்ற வழங்கப்பட்டது. அந்நாட்களில் இக்கண்டத்தில் வாழ்ந்தவர்களை பரதர், நாகர், இயக்கர், அரக்கர், இராட்சதர், பூதர், அசுரர், அவுணர், இடிமபர், கருடர், முனிவர், சித்தர், கந்தருவர், வானரர் என பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தனர். இராமாயணத்தில் வாலி, சுக்கிரீவன் எனும் வீரர்கள் மேற்கூறப்பட்ட வானர வகுப்பை சேர்ந்தவர்களெனக் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வேந்தனாக கூறப்படும் இராவணனும் அவனை சேர்ந்தவர்களையும் இயக்கர், நாகர் அல்லது ராட்சதர்கள் எனக்கூறப்பட்டுள்ளது. இவர்கள் அந்நாட்களில் நாகரீகம் அடைந்தவர்களாகவே காணப்பட்டார்கள்.

சமயவழிபாடுகளில் சிறப்பாக இருந்தார்கள். எனினும் இராமயணமானது வட இந்தியர்களான ஆரியர்களால் இயற்றப்பட்டமையாலும், அவர்களின் கதைகளுக்கு முக்கியத்துவமாக கொண்டு காணப்படுவதால் தென்பகுதியை சேர்ந்த இராவணனை ஒரு அரக்கனாக, காமுகனாக சித்தரித்துள்ளார்கள் என்பது சிலருடைய கருத்து. இராவணன் சிவபக்தன், சமயவழிபாடுகளில் அக்கறை உள்ளவன் என்பதை இராமாயணம் கூறியுள்ளபோதிலும், அக்காலத்தில் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த இயக்கர் நாகர் போன்ற பூர்வீகக்குடிகளுடன் குடியேற்றவாசிகளான ஆரியர்களுக்கு பகை இருந்துள்ளது. இதன் காரணமாகவே இராவணனையும் அவனை சார்ந்தோரும் அவ்வாறு தீயவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அவ்வாறில்லை என்று கூறுகிறார்கள்.
இலங்கையின் ஆதிக்குடிகளான, முக்கியமாக பேசப்படுகின்ற இயக்கர் நாகரின் ஆட்சிகள் பற்றிப் பார்ப்போமேயானால்... திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம், திருகோயில், முருகன்துறை, கலியாணி ஆகிய இடங்களை தலைநகராக் கொண்டு பல மன்னர்கள் ஆட்சி செய்ததாக வரலாற்று நூல்களில் கூறப்படுகின்றது. இவற்றில் முக்கியமானவனான இராவணனின் ஆட்சிக்காலம் பற்றி பார்க்கலாம்.

இக்காலத்தில் ஆண்ட சில மன்னர்கள்
- சயம்பன்
- சயம்பனின் மருமகன் யாளிமுகன்
- ஏதி
- ஏதியின் மகன் வித்துகேசன்
- வித்துகேசனின் மகன் சுகேசன்
- சுகேசனின் மகன் மாலியவான்
- மாலியவான் தம்பி சுமாலி
- குபேரன்

இராவணன் ஆட்சி

அக்காலத்து நாகர் பரம்பரையில் வந்த கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி (இவள் மேலே கூறப்பட்ட சுமாலியின் மகள்) வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும். ஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும். சிவதாசனே இராவணன் என்றும், பரமனே கும்பகருணன் என்றும் பசுபதியே விபீசணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர். இலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். குபேரன் என்பவன் இராவணனின் தந்தையாகிய வச்சிரவாகுவின் இயக்கசாதியை சேர்ந்த இன்னொரு மனைவியின் மகன். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான். அக்காலத்தில் குபேரனின் ஆட்சியில் இயக்கர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள்.
குபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். இராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிக திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள்.

இல.தமிழரின் வரலாறு கூறும் நூல்களின் பட்டியல்:-

பழையநூல்கள்
இராசமுறை
பரராசசேகரன் உலா
வையாபாடல் - 15ஆம் நூற்றாண்டு - வையாபுரி
கைலாயமாலை - 16ஆம் நூற்றாண்டு - முத்துராசக்கவிராசர்
வைபவமாலை - 18ஆம் நூற்றாண்டு - மயில்வாகனப்புலவர்
பிரித்தானியர் கால நூல்கள்
History of Jaffna - 1884 - S.Kasishetty
Jaffna Today and Yesterday - 1907 - Duraiyappa Pillai
History of Jaffna - 1912 - Muththuthampy Pillai
யாழ்ப்பாண வைபவ கௌமுதி - 1918 - வேலுப்பிள்ளை
Ancient Jaffna - 1926 - Rajanagam
Critiques of Jaffna - 1928 - Njanappiragasar
Tha Jaffna Kingdom
The Ancient People of Sri Lanka are Tamils
யாழ்ப்பாண பூர்வீக வைபவம்
யாழ்ப்பாண குடியேற்றம்

புதிய நூல்கள்
இலங்கைவாழ் தமிழரின் வரலாறு - கே.கணபதிப்பிள்ளை
Tamils and Ceylon - நவரட்ணம்
Kingdom of Jaffna - 1978 - Pathmanathan
Early Settlements in Jaffna - Ragupathy
யாழ்ப்பாண இராட்சியம் - சிற்றம்பலம்
பூனகரி தொல்பொருள் - புஸ்பரத்தினம்

எங்கள் மனமார்ந்த நன்றி தமிழ் செய்திகள் வலைப் பூ விற்கு (குழு)
-   தமிழரின் குரல்






Read more...

copy right  © தமிழரின்குரல்- தமிழனின்குரல்

Back to TOP