தன் தந்தையின் வரலாறு தெரியாத அரசியல் வாரிசு ....

>> Sunday, December 19, 2010



 நான் இன்னாரின் மகன் என்கிறே ஒரே தகுதியோடு அரசியல் களத்தில் இருப்பவர் கார்த்திக் சிதம்பரம் இவர் சமிபத்தில் வெளியாகி உள்ள ஒரு தமிழ் வார இதழில் விடுதலைச்  சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்களை ராஜினாமா செய்ய சொல்லி பேட்டி கொடுத்து இருகிறார் .எப்போதுமே சக கட்சிகாரர்களையும் , அவர்கள் அங்கம் வகிக்கும் கூட்டணியின் தலைமையை  மட்டுமே விமர்சித்து வந்த ஈரோட்டு காங்கிரஸ்காரர் அமைதி காக்க இப்போது மத்திய  அமைச்சரின் வாரிசு புது அவதாரம் எடுத்து இருக்கிறது .

திருமாவளவன் இலங்கை பயணம்

திருமாவளவன் அவர்களும் இலங்கை செல்லும் குழுவில் இருகிறார் என்பது தெரிய வந்தது அமைச்சர் சிதம்பரம் அவர்கள் கல்வி கடன் வழங்க கடலூர் வருகிறார் ஆனால் அந்த கூட்டதிற்கு மக்கள் வர மாட்டார்கள், எனவே மக்கள் திரள திருமாவளவன் அவர்களை அழைப்பதை தவிர வேறு வழி இல்லை என்று முடிவு செய்து அவ்விழா நடை பெற்றுக்கொண்டு 
 இருந்த நாளில் தான் .  திருமாவிற்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது -  பேசியது முதல்வர் -  சொல்லப்பட்ட செய்தி நீங்களும் இலங்கை செல்லும் குழுவில் உண்டு, என்பது தான் .ஈழ சொந்தங்களை பார்க்க கிடைத்த ஒரே வாய்ப்பு இது தான் அதை அவர் பயன் படுத்தி கொண்டார் . இது கார்த்திக் சிதம்பரம் அவர்களுக்கும் தெரியும் தெரிந்தும் அவர் திருமாவளவன் ராஜபக்க்ஷேவோடு அங்கே வாக்குவாதம் செய்யாமல் இங்கே வந்து பேசுகீறார் என்று கேள்வி எழுப்பி தமிழர்களுக்காக நாங்கள் ( காங்கிரஸ்) பேச மாட்டோம் என்பதை அவர் உறுதி செய்து இருகிறார் . அதிலும் திருமாவளவன் ராஜபக்க்ஷே சட்டையை பிடித்து கேட்கவில்லையாம் .இந்த வார்த்தைகள் மூலம் தான் ஒரு உண்மையான காங்கிரஸ்காரர் என்று கார்த்திக் சிதம்பரம் நிருபித்து உள்ளார் . சத்ய மூர்த்தி பவனில் வேஷ்டி கிழிப்பது எப்படி ? மண்டை உடைப்பது எப்படி ? நாற்காலி வீசுவது எப்படி ?( காங்கிரஸ் சண்டை )  என்று சக கோஷ்டி தலைவர்கள் மோதுவதை பார்த்து பார்த்து வளர்ந்த பிள்ளையிடம் வேறு என்ன நாம் எதிரபார்க்க முடியும் .

நாடாளமன்ற குழுவில் இடம் பிடித்தது திருமாவளவன் ராஜபக்க்ஷேவோடு காங்கிரஸ் சண்டை போடுவதற்கு அல்ல . தமிழர்களை நிலையை நேரில் அறிய தான் . நிலைமை அப்படி இருக்க அந்த நாட்டின் அதிகார பீடத்தில் இருப்பவன் காங்கிரஸ் நண்பர்களால் நேசிக்கபடுகிறவன் ,தமிழர்களால் எதிர்க்க படுகிறவன்  என்றாலும் அவனை சந்திப்பதை எப்படி தவிர்க்க முடியும் . பேச்சு வார்த்தையின் போது எதிரியாக இருந்தாலும் கை குலுக்கி பேசுவது தான் மரபு . இந்த அடிப்படை நாகரீகம் கூட இந்த அரசியல் வாரிசுக்கு தெரியாது போலதிருமாவளவன் ராஜபக்க்ஷே கொடுத்த பொருட்களை பெற்றாரா அல்லது பஜ்ஜி சாப்பிட்டாரா என்று கார்த்திக் சிதம்பரம் தன் தந்தையின் கோஷ்டியை சேர்ந்த அழகிரி அவர்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்

உலக ஊடகங்கள் எல்லாம் கூட நுழைய முடியாத இடத்தில முள்வேலியில் அடைக்க பட்ட ஈழ மக்களின் உண்மை நிலைமையை பதிவு செய்து , ஈழ தமிழர்களின் அவல நிலையை "வதக்குறாங்களய்யா " என்ற ஆவணப்படத்தின் மூலம் உலகிற்கு சொன்னவர் திருமாவளவன் , இந்த ஆவணப்படத்தை நாங்களும் புலிகளை ஆதரிக்கிறோம் , ஈழத்தை ஆதரிக்கிறோம் என்றும் சொல்லும் கும்பலுக்கே வெளியே சொல்ல மனம் இல்லாத போது இதை கார்திக் சிதம்பரம் போன்றவர்கள் உணர வாய்ப்பில்லை ,ஆனால் உளவு துறை மூலம் அமைச்சர் சிதம்பரம் அதை பார்த்து இருப்பார் என்பதில் ஐயம் இல்லை



சிதம்பரம் - இவரின் செல்வாக்கு என்ன  ??

1999 நாடாளமன்ற  தேர்தலை கார்த்திக் சிதம்பரம் மறந்து இருக்கலாம் ஆனால் அவர் தந்தை மறந்து இருக்க வாய்ப்பில்லை. மக்கள் தலைவர் அய்யா மூப்பனார் அவர்கள் இருந்த போது ஒரே அணியில் இப்போதைய உள்துறை அமைச்சர் அவர்களும், திருமாவளவன் அவர்களும் சிவகங்கை தொகுதியிலும் - சிதம்பரம் தொகுதியிலும் போட்டி இட்டார்கள். இதில் தன் அப்பா எவ்வுளவு வாக்குகள் பெற்றார் என்று தெரிந்து இருந்தால் கண்டிப்பாக மறந்து கூட திருமாவளவன் காங்கிரஸ் தயவில் வெற்றி பெற்றவர் என்றும்   ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் சொல்லி இருக்க மாட்டார் 

சிவகங்கை தொகுதியில் சிதம்பரம் பெற்ற வாக்குகள் 127528 (மூன்றாம் இடம் - கார்த்திக் சிதம்பரம் போட்ட ஓட்டும் சேர்த்து ) , சிதம்பரம் தொகுதில் திருமாவளவன் பெற்ற வாக்குகள் 225768 ( இரண்டாம் இடம் ) இது தான் இன்றைய இந்தியாவின் உள்துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழ் நாட்டில் அன்றைக்கு இருந்த செல்வாக்கு .மக்கள் தலைவர் அய்யா மூப்பனார் அவர்களின் மறைவுக்கு பின்னர் தனி கட்சி தொடங்கி வேறு வழி இல்லாமல் மீண்டும் காங்கிரஸ் கட்சியோடு  சேர்ந்து கொண்டார் , 2009  நடந்து முடிந்த நாடாளமன்ற தேர்தலில் எப்படி வெற்றி பெற்றார் என்பதை சொல்லி  சக காங்கிரஸ் கட்சியினரே வாயால் சிரிக்க முடியாமல் வேறு வழியாய் சிரித்து கொண்டு இருக்க , தன் தந்தையை ராஜினாமா செய்ய சொல்ல துப்பு இல்லாத  கார்த்திக் சிதம்பரம் இன்றைக்கு ஒடுக்க பட்ட மக்களை அரசியல் படுத்தி விடுதலைச்  சிறுத்தைகள் என்னும் இயக்கத்தை வழி நடத்தும் திருமாவளவன் அவர்களை ராஜினாமா செய்ய சொல்லுவது வியப்பாக உள்ளது . 

இப்படி பட்ட பேட்டிகளை கொடுக்கும் முன்பு காங்கிரஸ் கட்சியின் பலம் என்ன ? நம் தந்தையார் எவ்வுளவு வாக்குகள் தனித்து நின்றால் வாங்குவார்  , நடந்து முடிந்த தேர்தலில் எப்படி வெற்றி பெற்றார் ? என்பதை நினைத்து பார்த்து கார்த்திக் சிதம்பரம் பிறரை விமர்சிக்க வேண்டும் . அல்லது  குறைந்த பட்சம்   அப்பா,   நான் திருமாவளவன் பற்றி விமர்சிக்க போகிறேன் உங்கள் பெயரை எனக்கு பின்னால் போட்டு கொண்டு  உலா வரும் எனக்கு அப்படி செய்ய தகுதி உண்டா ? என்று தன் தந்தையாரிடம் கேட்டு இருக்கலாம் . 
 இல்லை 2011 , 2016 என விடுதலை சிறுத்தைகள் அறிவிப்பு செய்து இருக்கும் தங்கள் இயக்கத்தின் இலக்கை பற்றி பதவியை ராஜினாமா செய்யாமல் மூன்று கட்சி தாவி வந்து இருக்கும் காங்கிரஸில் உள்ள புது வரவு எம்.எல்.எ விடம் கேட்டு தெரிந்து கொண்டு இருக்கலாம் . இது எதுவுமே இல்லாமல் கார்த்திக் உளறுவது சிறு பிள்ளைத்தனம் 

பத்திரிகையில் பெயர் வர வேண்டும் என்பதற்கு வாயில் வருவதை எல்லாம்  பேசும் காங்கிரஸ் கட்சியில் தன் தந்தையின் வரலாறு தெரியாத இந்த  அமைச்சரின் வாரிசு மட்டும் என்ன விதி விலக்கா ??  

-- தமிழர் குரல் (தமிழனுக்கான குரல் )


1 comments:

Unknown December 11, 2010 at 4:33 AM  

This is an amazing article...this is the future journalism... keep it up..

Post a Comment

copy right  © தமிழரின்குரல்- தமிழனின்குரல்

Back to TOP